கெஸ்ட்டுக்கு மாறிய ஜோதிர்மயி

திருமணமாகியும் கூட கவர்ச்சிகரமாக நடித்து வரும் அரிய நாயகிகளில் ஒருவர் ஜோதிர்மயி. திருமணத்தையே சுத்தமாக மறைத்து விட்டு தமிழில் சில படங்களில் நடித்தார் ஜோதிர்மயி.
கவர்ச்சிகரமான ரோல்களுக்கும் ஓ.கே. சொன்ன அவரை தமிழ் திரையுலகம் ஓரளவு பயன்படுத்திக் கொண்டது. இருப்பினும் திருமணமானவராச்சே என்ற யோசனையி்ல் பல ஹீரோக்கள் ஜோதிர்மயியுடன் ஜோடி சேர தயக்கம் காட்டியதால் தமிழில் ஜோதிருக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லாமல் போய் விட்டது.
இதனால் கன்னடத்திற்கு மாறிப் பார்த்தார். அங்கும் சரிவரவில்லை. மறுபடியும் தாயகமான மலையாளத்திற்கேத் திரும்பினார். அங்கும் திருப்திகரமான வரவேற்பு இல்லை.
இதனால் 2வது நாயகி, கெஸ்ட் ரோல் என மாறி விட்டார் ஜோதிர்மயி. மோகன்லால் நடிக்கும் புதிய படம் ஒன்றில், ஜோதிர்மயி கெஸ்ட் ரோலில் தலை காட்டுகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications