ஜெ. மாலினி போய் ஜோ. லட்சுமி!

பல வருடங்களுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி பெரும் மிரட்டலை கொடுத்த படம் ஜெகன்மோகினி. ஜெயமாலினியின் கவர்ச்சி மற்றும் பேய்த்தனமான நடிப்புக்காக பெயர் பெற்றது இப்படம். கூடவே விட்டலாச்சாரியாவின் மாயாஜால காட்சிகளும் ரொம்ப பிரசித்தமாக இருந்ததால், இந்தப் படம் செம ஓட்டம் ஓடியது.
இப்போது இப்படத்ைத அதே பெயரில் ரீமேக் செய்கின்றனர். ஜெயமாலினி நடித்த வேடத்தில் இந்த மில்லனியத்தின் பிரமாண்ட கவர்ச்சியழகி நமீதா நடிக்கிறார். படத்தில் நிலாவும் இருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
நமீதாவின் அம்மா வேடத்தில் ஜெயமாலினியை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அணுகினர். நடிப்பை விட்டு கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட ஜெயமாலினி மீண்டும் நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்து வருகிறார். இருப்பினும் ஜெகன்மோகினிக்காக மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார். இருப்பினும் தனது முடிவைச் சொல்லாமல் இருந்து வந்தார்.
இதனால் நமீதா மற்றும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயமாலினியிடம் சொல்லி விட்டு இப்போது அவருக்குப் பதில் ஜோதிலட்சுமியை புக் செய்து விட்டனர்.
ஜெயமாலினியின் மார்க்கெட் மந்தமாக இருந்தபோது அவரது இடத்தைப் பிடித்தவர்தான் ஜோதிலட்சுமி. இவருடைய கலக்கல் ஐட்டம் பாட்டுக்களும் அந்தக் காலத்தில் ரொம்பப் பிரசித்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பவே பயந்து வருதே...!!


Click it and Unblock the Notifications











