கைப் இல்லையாம்-ஒப்புகொண்டார் காத்ரினா

சமீபத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மனைவி ஆயிஷா ஷெராப், 'நாட்டுக்கு மிக அவசியமான' இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் காத்ரினாவின் இயற்பெயர் காத்ரினா டர்குவட்டே என்றும், தனது பெயர் எளிதில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்த்தில் அவர் அதை காத்ரினா கைப் என மாற்றி கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதையடு்தது பாலிவுட்காரர்கள் காத்ரினாவின் இயற்பெயர் கைப்பா அல்லது டர்குவட்டேவா என பட்டிமன்றமே நடத்தி வந்தனர்.
யாராலும் விடையளிக்க முடியாத இந்த பில்லியன் டாலர் கேள்விக்கு தற்போது காத்ரினாவே தன் பதில் சொல்லிவிட்டார்.
'ஆம்' என்பது தான் அவரது பதில். அவர் கூறுகையில்,
இந்தியா வந்தபோது மக்களிடம் என் பெயர் எளிதாக சென்றடையும் வேண்டும் என்பதற்காக அதை மாற்றி கொண்டேன். இதில் வேறு எதுவும் இல்லை. இதனால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை என்றார்.
காத்ரினா இங்கிலாந்தில் பிறந்து ஹவாய் தீவுகளில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாயார் பிரிட்டனைச் சேர்ந்தவர். தந்தை காஷ்மீரைச் சேர்ந்தவர்.


Click it and Unblock the Notifications











