வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற காவ்யா மாதவன்

நேற்று தமிழகம், புதுவையைப் போன்று கேரளத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. பிரபல நடிகை காவ்யா மாதவன் கொச்சியில் உள்ள வெண்ணலா வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது அவர் மட்டும் நேராக வாக்களிக்க உள்ளே சென்றார். இதைப்பார்த்த வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்குமாறு கூறினர்.
ஆனால் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க விருப்பமில்லாமல் காவ்யா மாதவன் வீட்டுக்கு கிளம்பினார். அங்கிருந்தவர்களிடம் கூட்டம் குறைந்த பிறகு வருவதாக கூறிச் சென்றுவிட்டார்.
ஸ்டார் என்றால் வரிசையில் நிறக்கக்கூடாதா என்ன?
Comments


Click it and Unblock the Notifications