வாடா.. குஷ்பு .. ராக்கம்மா!

By Staff

Kushboo with Sundar C
சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் வாடா படத்தில், அவரது மனைவி குஷ்பு அந்தக் காலத்துக் ஹிட் பாட்டுக்கு செமத்தியான குத்தாட்டம் போட்டிருக்கிறாராம்.

சுந்தர்.சி ஹீரோவான பின்னர் அவரும், குஷ்புவும் சேர்ந்து இதுவரை ஒரு படத்தில் கூட தலை காட்டியதில்லை. இந்த நிலையில் வாடா படத்தில் குஷ்புவை ஒரு பாட்டுக்கு ஆட வைத்து விட்டார் சுந்தர்.சி.

வாடா என்ற படத்தில் நடித்து வரும் சுந்தர்.சி, அப்படத்தில், பட்டிக்காடா பட்டணம் படத்தில் சிவாஜிகணேசன் ஆடிப் பாடும் என்னடி ராக்கம்மா பாட்டை ரீமிக்ஸ் செய்து வைக்க விரும்பினார். அதில் குஷ்புதான் ஆட வேண்டும் எனவும் கூறி விட்டார்.

பிறகென்ன சுந்தர்.சியும், பட இயக்குநரும் சேர்ந்து குஷ்புவிடம் கேட்டனர். ஆனால் குஷ்பு முதலில் மறுத்து விட்டாராம். இருந்தாலும் விடாமல், போராடி அனுமதி பெற்று இப்பாடலுக்கு ஆட சம்மதம் பெற்றனராம்.

அந்தக் காலத்து ரசிகர்களை பேராட்டம் போட வைத்த பாடல் என்பதால் மிகுந்த கவனத்துடன் இப்பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனராம். குஷ்புவும் கலக்கலாக ஆடியுள்ளாராம். படத்தில் இந்தப் பாடல் பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்கிறது வாடா வட்டாரம்.

ஏற்கனவே சத்யராஜுடன் தங்கப் பதக்கத்தின் மேலே என்ற அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா பாடலின் ரீமிக்ஸில் ஆட்டம் போட்டிருந்தார் குஷ்பு. இப்போது சிவாஜி - ஜெயலலிதா நடித்த படத்தின் பாடல் ரீமிக்ஸில் ஆட்டம் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X