லாரன்ஸிடம் மீனாட்சி ட்ரெயினிங்

முன்பெல்லாம் இந்த டெக்னிக்கை பிரபுதேவாதான் உபயோகிப்பார். இதனாலேயே அவருடன் நடிக்க பல நாயகிகள் தயங்குவார்கள். இப்போது அவரது சிஷ்யர் ராகவாவும் அதே டெக்னிக்கை உபயோகிக்க ஆரம்பித்துள்ளார். அதாவது நடனம் சரியாக வரவில்லை என்றால் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து சொல்லிக் கொடுப்பது.
ஆனால், இதற்காக லாரன்ஸைத் திட்டவில்லை மீனாட்சி. பாராட்டித் தள்ளுகிறார்.
ராஜாதி ராஜா படத்தில் லாரன்ஸுடன் நடிக்கிறேன். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நான் நன்றாக நடனம் ஆடியதாக கூறினார்கள்.
முறைப்படி எனக்கு நடனம் தெரியும். இருந்தாலும் ராஜாதி ராஜா படத்தில் லாரன்ஸுக்கு இணையாக என்னால் ஆட முடியவில்லை. 2 பாடல் காட்சிகளில் அவருடன் நடிக்கிறேன்.
லாரன்ஸ் திறமையான டான்ஸ் மாஸ்டர். அவருடன் ஆடும்போது மிகக் கடினமான அசைவுகளைச் செய்ய வேண்டும். வெறும் ரிகர்சல் மட்டும் அதற்குப் பத்தாது.
கடந்த 2 நாட்களாக ரிகர்சல் எடுத்தும் சரியாக வரவில்லை. எனவே லாரன்ஸிடமே குறிப்பிட்ட அந்த அசைவுகளை சொல்லித் தருமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் எனக்கு பயிற்சி தருகிறார். இன்னும் சில தினங்களில் அவருக்கு இணையாக ஆடுவேன் என நம்பிக்கை வந்துவிட்டது, என்கிறார் மீனாட்சி.


Click it and Unblock the Notifications











