மறுபடியும் மாதவி

அந்தக் காலத்து அழகிய நாயகியர்களில் மாதவியும் ஒருவர். கமல், ரஜினி, மோகன்லால், மம்முட்டி, என்.டி.ஆர், ராஜ்குமார் என அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் இணைந்து நடித்த பெருமைக்குரியவர்.
கண்களால் கவிதை பாடும் அழகிய நடிகை மாதவி. தென்னிந்திய திரைவானில் மிகப் பெரிய நட்சத்திரமாக பிரகாசித்த மாதவி பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
இப்போது பழைய நடிகைகள் மறுபடியும் நடிக்க வரும் சீசன். சில ஆண்டுகளுக்கு முன்பு நதியா நடிக்க வந்தார். இப்போது கடும் கிராக்கியுடன் கூடிய அம்மா நடிகையாக அசத்தி வருகிறார் நதியா. அதிலும் அழகிய அம்மாவாக நதியாவைக் காட்ட இயக்குநர்கள் துடிக்கிறார்கள்.
இந்த நிலையில் மாதவியும் நடிக்க வரப் போகிறாராம். என்ன மாதிரியான ரோல்களில் நடிப்பது, எந்த மொழிப் படங்களில் நடிப்பது என்பது உள்ளிட்ட பிற விவரங்களை விரைவில் வெளியிட இருக்கிறாராம்.
மாதவிக்கு இப்போது இரு குழந்தைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications