புத்தாண்டு நிகழ்ச்சியில் 'கொலவெறி' பாட்டுக்கு ஆட்டம்போடும் மல்லகா ஷெராவத்
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெரவாத் புத்தாண்டு நிகழ்ச்சியில் தனுஷின் ஒய் திஸ் கொலவெறிடி பாட்டுக்கு ஆடவிருக்கிறார்.
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் புத்தாண்டுதோறும் பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் நடனம் ஆடுவார். ஆமாம் லம்பா பணம் வாங்கிக் கொண்டு தான். அவ்வாறு ஆடும்போது அந்த ஆண்டு எந்த பாடல் மிகவும் பிரபலமாக உள்ளதோ அந்த பாட்டுக்கு ஆட்டம் போடுவார்.
இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு ஆட்டம் போட அவர் தேர்வு செய்துள்ள பாடல் தனுஷ் பாடி உலகமே முணுமுணுக்கும் 'ஒய் திஸ் கொலவெறி, கொலவெறிடி'. கொலவெறிடி பாடலை கோடிக்கணக்கானவர்கள் கேட்டுள்ளனர். இந்த பாடல் மூலம் தனுஷ் பாலிவுட்டில் பிரபலமாகிவிட்டார். அமிதாப் பச்சன் தனுஷை புகழ்ந்துள்ளார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள்.
என்னடா இது மல்லிகா ஷெராவத் சிம்புவின் ஒஸ்தி படத்தில் நடித்துவிட்டு தனுஷ் பாட்டுக்கு ஆடப் போகிறாரா என்று நினைக்க வேண்டாம். ஒஸ்தியில் அவர் குத்தாட்டம் போட்ட சலா சலா பாட்டுக்கும் ஆடவிருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications
