'சமத்து' மீனாட்சி!

கருப்பசாமி குத்தகைதாரர் மூலம் தமிழுக்கு வந்தவர் மீனாட்சி. முதல் படத்திலேயே சாந்தபாந்தமாக வந்து போனதால், மக்கள் மனில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார்.
அத்தோடு படப்பிடிப்பின்போது எந்த தொந்தரவும் செய்யாதவர், கேரவன் வேண்டும், கேரட் அல்வா வேண்டும் என்று பஞ்சாயத்து செய்யாதவர், கொடுத்த சம்பளத்திற்கு குறைவில்லாமல் நடித்துக் கொடுப்பவர் என்ற நல்ல பெயரும் மீனாட்சிக்குக் கிடைத்துள்ளது.
இதனால் மீனாட்சியை நாடினோர் கைவிடப்படார் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். கூடவே கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து வருகிறதாம்.
லேசுபாசான கவர்ச்சிக்கு ஓ.கே.என்று மீனாட்சியும் தலையை ஆட்டி வைத்து வருகிறாராம்.
மீனாட்சியின் தொழில் ரகசியம் தெரியாமல் குழம்பிப் போயுள்ள வாய்ப்பிழந்த நடிகைகள், மீனாட்சியைத் தேடிப் போவோரை எப்படி டைவர்ட் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











