அம்மா Vs அம்மா!

இதென்ன கலாட்டா என்று பயந்து போய் விடாதீர்கள். இது வேறு மாதிரி.
திரிஷாவுக்கு எல்லாமே அம்மாதான் என்பது எல்லோருக்குமே தெரியும். திரிஷாவின் கால்ஷீட்களைப் பார்ப்பது முதல் திரிஷா சம்பந்தப்பட்ட அனைத்தையும் அவர்தான் கவனிக்கிறார்.
அதேபோல திரிஷாவின் பரம வைரியாக தெலுங்கில் வலம் வரும் இலியானாவுக்கும் எல்லாமே அவரது அம்மாதான். கால்ஷீட் முதல் இத்யாதி, இத்யாதி வரை எல்லாமே மம்மிதானாம்.
அத்தோடு, இலியானாவின் உடை அழகுக்கு காரணமும் அவரது அம்மாதாணாம். படத்துக்குப் படம் இலியானா கலக்கல் காஸ்ட்யூம்களில் வந்து போகக் காரணம், அவரது அம்மாவின் செலக்ஷன்தானாம் (டிரஸ்களுக்கான செலவு மட்டும் தயாரிப்பாளருடையது)
இலியானாவின் இடத்தைப் பிடிக்கும் முயற்சியை திரிஷா இன்னும் கைவிட்டு விடவில்லை. அந்த முயற்சிக்கு திரிஷாவின் தாயாரும் பக்க பலமாக இருக்கிறார். அதேபோல, இலியானாவின் 'இடுப்புக்கு' பக்கத்தில் கூட யாரும் வந்து விடாமல் படு கவனமாக இருக்கிறாராம் அவரது அம்மா.
இப்ப சொல்லுங்க, அம்மா 'வெர்சஸ்' அம்மா சரிதானே!


Click it and Unblock the Notifications











