நேஹாவின் கலக்கல் வீடியோ

பாலிவுட்டைக் கலக்கி வரும் கவர்ச்சிப் புயல் இப்போது மேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. பாலிவுட்டில் நேஹாவின் கவர்ச்சிக்கு தற்போது இறங்குமுகம்தான். இதனால் வேறு ஆப்ஷன்களைத் தேடி நேஹா அலைபாயத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில்தான், ஹாலிவுட்டைச் ேசர்ந்த ஜெனுஒயின் நேஹாவைத் தேடி வந்தார். அவர் தயாரித்துள்ள பேபி என்கிற இசை வீடியோ ஆல்பத்தில் ஒரு பாடலுக்கு ஆடித் தருமாறு நேஹாவிடம் ஒயின் கேட்க,
உடனே சம்மதித்தார் நேஹா.
சமீபத்தில்தான் இந்த பாடலுக்கான ஷூட்டிங் முடிந்ததாம். அட்டகாசமாக ஆடியுள்ளார் நேஹா என பாராட்டுகிறார் ஒயின்.
இந்த ஆல்பத்திற்காக நல்ல மேற்கத்திய முகம் கொண்ட இந்திய நடிகையைத் தேடிக் கொண்டிருந்தபோதுதான் நேஹா அவரது கண்ணில் பட்டுள்ளார்.
விரைவில் பேபி இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications