'நக்ஷத்திரா' என பெயரை மாற்றிக் கொண்ட பூனம் கவுர்!

இப்போது அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்துள்ளவர் பூனம் கவுர். இவர் தன் பெயரை திடீரென நக்ஷத்திரா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
நெஞ்சிருக்கும் வரை படத்தில் எஸ்ஏ சந்திரசேகரனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பூனம் கவுர். சொந்த மாநிலம் பஞ்சாப் என்றாலும், ஹைதராபாதில் செட்டிலாகிவிட்டவர். 2006-ல் மிஸ் ஆந்திரா பட்டம் வென்றவர் இவர்.
முதல் படம் கை கொடுக்காததால் தெலுங்குப் பக்கம் போனார். அங்கும் சில படங்கள் நடித்துப் பார்த்தார். வேலைக்காகவில்லை. இந்த நிலையில் பிரகாஷ் ராஜின் பயணம் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஓரளவுக்கு நன்றாகப் போகும் நிலையில், தனது பெயரை நியூமராஜிஸ்ட், அஸ்ட்ராலஜிஸ்ட் என பலரது ஆலோசனையுடன் நக்ஷத்திரா என மாற்றிக் கொண்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications