நிகோல் ஏற்படுத்திய சிக்கல்!

ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் படம் அடடா என்ன அழகு. புனேயைச் சேர்ந்த புதுமுகம் நிகோல் கதாநாயகியாக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் இந்தப் பெண்ணை கிட்டத்தட்ட அரை நிர்வாணத்தில் புகைப்படங்கள் எடுத்து அவற்றைப் பத்திரிகையாளர்களுக்கும் கொடுத்திருந்தார் அதன் இயக்குநர் ஜெயமுருகன்.
புதுப் பொண்ணுன்னாலும், எள்ளுன்னா எண்ணெய்யா நிக்குது. அபாரமா ஒத்துழைப்பு தருது, என வாயாரப் பாராட்டித் தள்ளினார். இந்த நடிகைக்காகவே ஒரு தனி பிரஸ் மீட்டை ஐதராபாத்தில் ஏற்பாடு செய்து அதற்கு சென்னையிலிருந்து பத்திரிகையாளர்களை விமானத்தில் கூட்டிப் போய் அந்த ஸ்டில்களைக் கொடுத்தவர்கள் இந்த இயக்குநரும் தயாரிப்பாளரும்.
இப்போது பாதிப் படம் முடிவடைந்த நிலையில், கதாநாயகி நிகோல் தகராறு செய்வதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் எம்வி ராமசாமி.
பேசிய தொகைக்கு மேல் ரூ.4 லட்சம் கொடுத்தால்தான் படத்தில் நடிப்பேன். இல்லாவிட்டால் முடியாது என்று நிகோலின் தாயார் டெபி கறாராகக் கூறிவிட்டதாக தனது புகாரில் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ஷூட்டிங்குக்காக அனைவரும் காத்திருந்ததாகவும், ஆனால் ஓட்டலில் தங்கியிருந்த நிகோலும் அவரது தாயாரும் காலையில் தரப்பட்ட டிபன் மட்டமாக இருந்தது என்று கூறிவிட்டு, யாருக்கும் சொல்லாமல் விமானத்தில் புனேக்குப் பறந்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நிகோலை நேரில் அழாத்து விசாரணை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
அடடா.. அழகா இல்லையே!


Click it and Unblock the Notifications











