தெலுங்கில் மீண்டும் ரம்பா!

பிரதிக்ஷனம் எனும் புதிய படத்தில் புதுமுக நாயகனுக்கு ஜோடியாக (!!) நடிக்கும் அவர், மேலும் இரு தெலுங்குப் படங்களுக்கும் ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து கவர்ச்சிக் களத்தில் குதித்துள்ளவர் முமைத் கான்.
தமிழில் விடியும் வரைக் காத்திரு உள்பட 3 படங்களில் நடிக்கிறாராம்.
இதுகுறித்து ரம்பா சமீபத்தில் அளித்த பேட்டி:
இந்தியாவின் முன்னணி மொழிகள் அனைத்திலும் நடித்துவிட்டேன். ஆனால் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும்தான் மரியாதை, சம்பளம் எல்லாமே நல்லா தர்றாங்க.
தெலுங்குப் படவுலகிலிருந்துதான் நான் தமிழுக்கு வந்தேன். ஒரு கேப் விழுந்ததால அக்கா, அண்ணி வேடங்களுக்கு கூப்பிடாம, இன்னும் ஹீரோயின் ரோல்ஸ் பண்ணக் கூப்பிடறது எனக்கு சந்தோஷமா இருக்கு.
இது என்னோட செகண்ட் இன்னிங்ஸ்... நல்லபடியா இந்த முறையும் ஆடுவேன்னு நம்பறேன், என்கிறார்.
ரம்பா, நல்லா நடிங்க தெம்பா!


Click it and Unblock the Notifications











