ஆசினுக்கு சல்மானின் புது பரிசு!

By Staff

Asin with Salman Khan
ஆசினுக்கு முதலில் வீடு கொடுத்தார். இப்போது நாய்க்குட்டி ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளாராம் சல்மான் கான்.

ஆசினின் வரவால் இந்தி்த் திரையுலகில் ஏக களேபரமாகிக் கொண்டிருக்கிறது.

ஆசின் குறித்து தினசரி ஏதாவது ஒரு செய்தி வந்தவண்ணம் உள்ளது.

முதலில் ஆசினுக்கும், சல்மான் கானுக்கும் காதல் என்று செய்திகள் கிளம்பின. இந்தக் காதலுக்குப் பரிசாக சல்மான் கான் பெரிய வீடு ஒன்றை ஆசினுக்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. சல்மானின் இந்த திடீர் மாற்றத்தால் அவரது காதலி காத்ரீனா கைப் அப்செட் ஆகியுள்ளதாகவும் செய்திகள் கூறின.

ஆனால் இதை ஆசின் மறுத்தார். ஏன்தான் இப்படியெல்லாம் வதந்தி கிளப்புகிறார்களோ என புலம்பினார்.

இந்த நிலையில் ஆசினுக்கு சல்மான் கான் ஒரு நாய்க்குட்டி வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஆசினுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சர்ப்ரைஸாக ஒரு விலை உயர்ந்த நாய்க் குட்டியை வாங்கிக் கொடுத்து அசத்தி விட்டாராம் சல்மான்.

இருவரும் இப்போது லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

ஆனால் ஆசினுக்கு சல்மான் நாய் வாங்கிக் கொடுத்தது குறித்து ஆசினின் அப்பாவுக்குத் தெரியாதாம். ஆசினுக்கு நாய் பிடிக்கும், ஆனால் அது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று நான் கூறியுள்ளேன். ஆனால் இப்போது சல்மான் நாய் கொடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது என்கிறார் ஆசினின் அப்பா ஜோசப்.

அப்பாவுக்குத் தெரியாமயா ஆசின்?, தப்பாச்சே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X