சமீரா ரெட்டி பிறந்த நாள்!

வஞ்சனையில்லாமல் ஹீரோக்களைப் புகழ்கிறார். வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை. 'அசல்' ரிலீஸுக்கு காத்திருக்கும் இந்த தருணத்திலேயே 3 புதிய படங்களில் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறாராம். கமல் படம் ஒன்றிற்கும் கேட்டிருக்கிறார்கள்.
இந்த சந்தோஷத்தோடே இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் சமீரா.
பிறந்தநாள் விசேஷம் என்று எதுவும் இல்லையாம். மும்பையில் பெற்றோருடன் ஒரு சைவ விருந்தோடு இன்றைய கொண்டாட்டம் முடிந்து விடுகிறதாம்.
"நான் பொதுவாகவே அமைதியை விரும்புபவள். எனவே சிம்பிளாக பிறந்த நாளைக் கொண்டாட விரும்புகிறேன்" என்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications