ஹாங்காங்கில் காதலருடன் ஷில்பா

ராஜ் குந்த்ரா - ஷில்பா காதல், பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா வென்றவுடன் பிறந்ததாகும். ஆரம்பத்தில் இதை மறுத்து வந்த ஷில்பா சமீபத்தில் ஆமாம் என்று பகிரங்கமாக ஒத்துக் கொண்டார். குந்த்ராவை விரைவில் கல்யாணம் செய்யப் போவதாகவும் கூறினார்.
இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே தனக்கு வேண்டப்பட்ட நிருபர்கள் சிலரிடம் சொல்லி பெரிதாக செய்தி போடச் செய்தாராம் ஷில்பா.
இந்நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு செப்டம்பர் 9-ம் தேதி பிறந்தநாள். ஹாலிவுட் ரேஞ்சுக்குப் போய்விட்ட ஷில்பா தனது பாய்பிரண்டின் பிறந்த நாளை உள்ளூரில் கொண்டாடுவாரா...
உடனே ஹாங்காங் பறந்துவிட்டார் குந்த்ராவுடன். அங்கே புகழ்பெற்ற ஹாங்காங் கேஸினோ ரிசார்ட்ஸில் நான்கு நாட்கள் ஆசை தீர தங்கி உல்லாசமாகப் பொழுதைக் கழித்தார்களாம்.
அப்படியே ஒரு ஆக்ஷன் படத்தில் தனது போர்ஷன்ளை ஹாங்காங்கில் வைத்தே முடித்துக் கொடுத்துவிட்ட ஷில்பா, இப்போது தான் நடத்தும் ரியாலிட்டி ஷோவுக்காக மும்பை திரும்பிவிட்டார் (ஹாங்காங் ட்ரிப் செலவெல்லாம் தயாரிப்பாளருடையது!).
உல்லாசத்துக்கு உல்லாசம், கூடவே தொழிலையும் கச்சிதமாக முடித்த திருப்தி.


Click it and Unblock the Notifications











