அடுத்த பான்ட் நாயகி ப்ரீதா?

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பட நாயகிக்கான ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு ப்ரீதா அழைக்கப்பட்டுள்ளாராம். இதன் மூலம் பாண்ட் படத்தின் நாயகியாக ப்ரீதா தேர்வு செய்யப்படுவார் என்று பலமாக பேசப்படுகிறது.
ஏற்கனவே குவாண்டம் ஆப் சொலஸ் படத்தின் ஆள் தேர்வின்போதே ப்ரீதாவை பாண்ட் படத் தயாரிப்பாளர்கள் பார்த்துள்ளனர். இருப்பினும் ஏதோ யோசனையில் அவரை விட்டு விட்டனர். ஆனால் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் வெற்றி தற்போது ப்ரீதாவின் மீது பாண்ட் பட தயாரிப்பாளர்கள் மீண்டும் பார்வையைத் திருப்ப உதவியுள்ளது.
ஸ்லம்டாக்கில் நடித்துப் பெயர் பெற்று விட்ட ப்ரீதா இப்போது ஹாலிவுட்டின் பிரபல நாயகிகள் வரிசையை நோக்கி வேகமாக நடை போட ஆரம்பித்துள்ளார். சமீபத்தில்தான் உடி ஆலன், ப்ரீதாவை தனது அடுத்த படத்திற்கு புக் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
இப்போது பாண்ட் பட வாய்ப்பு ப்ரீதாவின் கதவை தட்டியுள்ளது.
Comments
சினிமா ஜேம்ஸ் பாண்ட் ப்ரீதா பின்டோ ஸ்லம்டாக் மில்லியனர் ஹாலிவுட் cinema freida pinto james bond slumdog millionaire


Click it and Unblock the Notifications