கலங்கடித்த ஸ்ரீதேவி!

Sridevi
இளமை எனும் பூங்காற்று.. இந்தப் பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தப் பாடலில் கண்ட ஸ்ரீதேவி, ரசிகர்கள் கண்களிலிருந்து இன்னும் அகலவில்லை. இன்னும் அதே இளமையுடன், இன்றைய இளம் நடிகைகளுக்கு கடும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஸ்ரீதேவியை சில நாட்களுக்கு முன்பு மும்பையில் ரசிகர்கள் பார்த்து வியந்து போயினர்.

அது எச்டிஐஎல் இந்தியா கோட்டூர் வாரம் எனப்படும் ஒரு நகைகள் மற்றும் பேஷன் விழாவின் ரேம்ப் வாக் நிகழ்ச்சி. எத்தனையோ அழகிகள் வண்ணமயமான உடைகளுடன் நடை போட்டனர். ஆனால் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிட்டவர் ஸ்ரீதேவி மட்டும்தான்.

அட்டகாசமான உடையில், 16 வயதினிலே படத்தில் பார்த்த அதே மாறாத அழகுடன் ஜம்மென்று நடந்து வந்த ஸ்ரீதேவியைப் பார்த்து அத்தனை பேரும் கண்கள் வியப்பில் விரிய கைகளைத் தட்டியபடி ரசித்தனர். ஸ்ரீதேவி நடந்து முடிந்து போகும் வரை கைத்தட்டல் நிற்கவில்லை.

கருப்பு நிற கெளனில் படு ஸ்டைலாக, அழகாக வந்த ஸ்ரீதேவி, அத்தனை பேரின் இதயங்களையும் ஒரே ஸ்டிரைக்கில் துள்ள வைத்து விட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் கலைஞர்களான ரவீனா டாண்டன், டிம்பிள் கபாடியா, ஹ்ருத்திக் ரோஷன், தியா மிர்ஸா, ஜாவேத் கான், கரண் ஜோஹர் என அனைவருமே வியந்தபடி கைத்தட்டிக் கொண்டிருந்தனர்.

ரவீனா டாண்டன் கூறுகையில், பாருங்கள், இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இன்றைய நாயகிகளுக்கு சற்றும் இளைக்காத அழகுடன், இளமையுடன் எப்படித்தான் இவரால் இருக்க முடிகிறதோ. அவரது உடல் அமைப்பும், அழகும், அதைப் பேணிக் காக்கும் கடமையும் யாருக்கும் வராது என்றார் வாயாராப் புகழ்ந்தபடி.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து ஸ்ரீதேவி கூறுகையில், உண்மையில் எனக்கே இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ரேம்ப் வாக்கில் பங்கேற்க என்னை அழைத்தபோது முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது பெருமையாக உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X