மீண்டும் ஒரு பாலிவுட் ரீமேக்கில் த்ரிஷா!
ரீமேக் நாயகி என்ற பட்டப் பெயரே சூட்டுமளவுக்கு தொடர்ந்து ரீமேக் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் முன்னணி நடிகை த்ரிஷா.
பாலிவுட் பிளாக்பஸ்டர் 'பாண்ட் பஜா பாராத்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க த்ரிஷாவை தேர்வு செய்துள்ளனராம் யுடிவி நிறுவனத்தினர்.
இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடித்த வேடத்தில் த்ரிஷா நடிக்கிறாராம்.
ஏற்கெனவ பேஷன் உள்ளிட்ட பல ரீமேக் படங்களில் நாயகியாக நடிக்க, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முதலில் நாடுவது த்ரிஷாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் இப்போது அவர் நடிக்கும் தீன் மார் படம் பாலிவுட்டில் வந்த லவ் ஆஜ் கல்லின் ரீமேக். இந்தப் படம் இன்று வெளியானது. அடுத்து வெங்கடேஷுடன் அவர் நடிக்கும் பாடிகார்ட் படமும் ரீமேக்கே. விஜய் நடித்த காவலன் படம்தான் இது.
நேரடியாக இந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அரிதாகிவிட்டாலும், பாலிவுட் படங்களில் நடிக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம்!


Click it and Unblock the Notifications











