'அம்பாசடர்' ஆனார் திரிஷா!

நடிப்போடு 'அம்பாசடர்' வேலைகளையும் நடிகர், நடிகைகள் அதிக அளவில் பார்க்கும் காலம் இது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது பொருட்களை பிரபலப்படுத்த திரைக் கலைஞர்களை அதிகம் தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளன.
மாதவன் யுனிவர்செல் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக உள்ளார். டிவிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக சூர்யா உள்ளார். கோக் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக விக்ரம் இருக்கிறார். ஆரோக்யா பால் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக சமீபத்தில் முன்னாள் நாயகி நதியா நியமிக்கப்பட்டார்.
இந்த வரிசையில், திரிஷாவும் 'அம்பாசடர்' ஆகியுள்ளார். சில்லறை செல்போன் வர்த்தகத்தில் ஆந்திராவில் முன்னணியில் இருக்கும் பிக் சி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஹைதராபாத்தின், ஹிமாயத் நகரில் உள்ள அந்த நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தை திரிஷா தொடங்கி வைத்தார். மேலும் கேக் ஒன்றையும் வெட்டினார்.
பின்னர் கூடியிருந்த செய்தியாளர்களிடம் திரிஷா பேசுகையில், இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தில் எனக்கும் ஒரு பங்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. பெருமையாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்க என்னால் ஆனதைச் செய்வேன்.
எனது திரையுலக வாழ்க்கை மிகச் சிறப்பாக, சீராக போய்க் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் அதிக அளவில் தெலுங்குப் படங்களில் நடிக்க முயற்சிப்பேன் என்றார் திரிஷா.
திரிஷா 'அம்பாசடர்' ஆவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் வாகனத்தின் அம்பாசடராகவும் இருக்கிறார் திரிஷா.


Click it and Unblock the Notifications











