மீண்டும் வரும் வசுந்தரா!

ஹே ராம் படத்தில் நடிகையாக அறிமுகமான வசுந்தரா தாஸ், சிட்டிசனில் அஜீத்துடன் ஜோடியாக நடித்தார். ஆனால் தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை. மாறாக மலையாளத்துக்கு மாறினார்.
அங்கு ஓரிரு படங்களில் நடித்தார். கடைசியாக வஜ்ரம் படத்தில் தலை காட்டியிருந்தார். அதன் பின்னர் அவரை எங்குமே காணவில்லை. பாடல், காதல், ஆல்பம் என பிசியாக இருந்து வந்த வசுந்தரா தற்போது மீண்டும் அரிதாரம் பூச வந்துள்ளார்.
மலையாளத்தில் உருவாகும் பாஸ் என்ற படத்தில் வசுந்தரா நடிக்கவுள்ளார். சுரேஷ் கோபி இப்படத்தின் நாயகன். மலையாளப் படத்தில் நடித்தாலும் வசுந்தராவுக்கும் தமிழ்சினிமாவுக்கும் இப்படத்தில் ஒரு சம்பந்தம் இருக்கிறது. அதாவது தமிழ் நடிகை பூஜா என்ற கேரக்டரில் நடிக்கிறாராம் வசுந்தரா.
இப்படத்திற்காக தனது மெல்லிய இடை உடலில் சற்றே எடை சேர்த்து புஷ்டியாகியுள்ளாராம் வசுந்தரா. இதனால் முன்பு பார்த்ததை விட குண்டாக, கொழுகொழுவென காணப்படுகிறார் வசுந்தரா.
அடுத்து தமிழுக்கும் வருவீங்களா வசுந்தரா?


Click it and Unblock the Notifications











