ஸ்ரீதேவிகா நிச்சயதார்த்தம்!

By Staff

Sridevika
நடிகை ஸ்ரீதேவிகாவுக்கும் மும்பையைச் சேர்ந்த பைலட்டான ராமச்சந்திரனுக்கும் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி கேரளாவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.

மலையாள நடிகையான ஸ்ரீதேவிகா, தமிழில் ராமகிருஷ்ணா படம் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து அந்த நாள் ஞாபகம், அன்பே வா, ஞாபகங்கள் படங்களில் நடித்தார். எதுவுமே சொல்லிக் கொள்கிற மாதிரி ஓடவில்லை. இப்போது சாமி இயக்கத்தில், 'சரித்திரம்" படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீதேவிகாவுக்கு திடீரென திருமணம் நிச்சயமாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த விமான பைலட் ரோத் ராமச்சந்திரனுக்கும் 23ம் தேதி காலை 11 மணியளவில், பாலக்காடு கஜாலா ஹாலில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. திருமணம் அடுத்த ஆண்டு நடக்கிறதாம்.

ஏன் இந்த திடீர் திருமணம்?..

ரோத் என் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர். எங்கள் திருமணம் இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மும்பையில் குடியேறி விடுவேன்.

இப்போது 'சரித்திரம்" படத்தில் நடிக்கிறேன். நல்ல கேரக்டர் கிடைத்தால், சினிமாவில் தொடர்ந்து நடிக்க வருங்கால கணவர் அனுமதி கொடுத்துள்ளார் என்கிறார் ஸ்ரீதேவிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X