தெரு நாய்களைக் காக்கும் ராணி முகர்ஜி!

இவரது அத்தை தேபஸ்ரீராய் ஏற்கெனவே தெருநாய்களைக் காப்பதற்கென்றே ஒரு அமைப்பைத் துவங்கியுள்ளார்.
இந்த அமைப்பின் வெப்சைட் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் ராணி முகர்ஜியும் பங்கேற்றார்.
இதுகுறித்து ராணி முகர்ஜி கூறுகையில், "என்னுடைய அத்தைக்கு நாய்கள் மீது அலாதி ப்ரியம். குறிப்பாக ஆதரவற்று தெருவில் சுற்றும் நாய்களைப் பாதுகாப்பதை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறார். இனி அவரது முயற்சிக்கு என்னாலான உதவியைச் செய்யப் போகிறேன். அவரது நோக்கம் நிறைவேறத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன்..." என்றார்.
கைவிடப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளின் நலனுக்காகத்தான் ஆரம்பத்தில் இந்த அமைப்பைத் துவங்கினார் தேபஸ்ரீராய். இப்போது தனது கவனம் முழுவதையும் தெருநாய்கள் பக்கம் திருப்பியுள்ளார்.
Comments
தெரு நாய்கள் தேபஸ்ரீராய் பாதுகாப்பு பாலிவுட் ராணி முகர்ஜி debhashri rai rani mukherjee stray dogs website


Click it and Unblock the Notifications