அனுஷ்காவின் அபார மார்க்கெட்!

இதனால் எப்போதும் ஒரு மினி கூட்டமே அனுஷ்காவை கால்ஷீட் கோட்டுத் துரத்துவதாகக் கூறுகிறார்கள்.
தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படமும், அல்லு அர்ஜுன் மற்றும் மனோஜ் மன்ச்சுடன் வேடம் படமும் செய்கிறார். மற்றொரு படம் வி சமுத்ரா இயக்கும் பஞ்சாக்ஷரி.
இந்தப் படங்கள் தவிர, லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா படத்திலும் அனுஷ்காதான் ஹீரோயின். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாம் இது.
தமிழில் சிங்கம் படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். இன்னும் சில படங்களிலும் அனுஷ்காவை நாயகியாக்கத் தமிழ் தயாரிப்பாளர்கள் துடித்தாலும், அவரது உயரம் இங்குள்ள நாயகர்களுக்கு பெரும் துயரமாக உள்ளதாம்.
'எவ்வளவு காஸ்ட்லியான ஹை ஹீல்ஸ் ஷூக்கள் தேவைப்பட்டாலும் ஹீரோக்களுக்கு வாங்கிக் கொடுத்திரலாம்பா... நம்ம படத்துல அந்த யோகா டீச்சர் அம்சமா ஒரு குத்தாட்டம் போட்டு கும்முனு நடிச்சிக் கொடுக்கணும்... ஏற்பாடு பண்ணுங்க' என்று இயக்குநர்களை நச்சரிக்கிறார்களாம் சில தயாரிப்பாளர்கள்!


Click it and Unblock the Notifications











