தமிழை விரும்பும் அனுயா

முதல் வேலையாக தமிழில் பேச பெரும் ஆர்வம் காட்டுகிறாராம். யாரைப் பார்த்தாலும் தமிழிலேயே - தப்புத் தப்பாக இருந்தாலும் - பேசுகிறாராம். தன்னுடன் தமிழிலேயே பேசுமாறும் கேட்டுக் கொள்கிறாராம்.
தமிழில் நன்றாகப் பேசத் தெரிந்தால், தமிழ் திரையுலகைக் கலக்கி விடலாம் என்பது அவரது எண்ணம்.
மும்பையிலிருந்து வந்தவர் என்றாலும் கூட அனுயா காட்டும் தமிழ் ஆர்வம் படப்பிடிப்புகளில் பாராட்டைப் பெற்றுத் தருகிறதாம்.
முதல் படமான சிவா மனசுல சக்தி ஹிட் ஆகி விட்டதால் சென்டிமென்ட்டாக இவரை ராசியான நடிகைகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
தற்போது மதுரை சம்பவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அனுயா. இவருடன் தூத்துக்குடி நாயகி கார்த்திகா இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
இருப்பினும் அனுயாவுக்கு அட்டகாசமான கேரக்டராம். இன்ஸ்பெக்டர் கேரக்டரில் வருகிறார் அனுயா. கிளாமரிலும் பட்டையைக் கிளப்பியுள்ளாராம்.
அப்ப இனிமேல் ரசிகர்கள் மனசுல அனுயாதான்...


Click it and Unblock the Notifications











