'காணாமல்' போன பாவான கன்னடத்தில் படு பிஸி!

By Shankar

தமிழில் ஒரே நேரத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாவனா, திடீரென்று காணாமல் போய்விட்டார். கேட்டால் தெலுங்கில் நடிக்கிறேன் என்று கூறிவந்தார்.

ஆனாலும் அங்கு பெரிதாக எந்தப் படமும் ஹிட்டான மாதிரி தெரியவில்லை.

இடையில் 'அசல்' தமிழ் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக எட்டிப்பார்த்தார்.

இந்த நிலையில்தான், கன்னடத்தில் புனித்ராஜ் குமார் ஜோடியாக இவர் நடித்த ஜாக்கி படம் வெளியானது. அங்கு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போது கன்னட சினிமாவின் அதிர்ஷ்ட நாயகியாகிவிட்டார் பாவனா.

மளமளவென பட வாய்ப்புகளும் வரத் துவங்கியுள்ளன. 'இனி தெலுங்கு, தமிழ், மலையாளம் எனத் தாவ வேண்டாம். கன்னடத்திலேயே செட்டிலாகிவிடலாம்' என்ற ஐடியாவில், பெங்களூரில் நிரந்தரமாக வீடு பார்க்க ஆரம்பித்துள்ளார் பாவனா.

"கன்னட சினிமா இன்னும் பெரிய உயரத்துக்குப் போகும். அந்த அளவு திறமைசாலிகள் நிறைந்த துறை இது...", என்று கன்னட சினிமா புகழ்பாடவும் ஆரம்பித்துள்ளார்.

இதான்...இதான் பிழைக்கத் தெரிந்த நடிகைக்கு அழகு!

More from Filmibeat

Read more about: பாவனா bhavana kannada
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X