'நன்னா' சாப்பிடும் நமீதா!

தமிழில் தனது கவர்ச்சிப் புயலால் ரசிகர்களை அலைக்கழித்து வரும் நமீதா மனம் திறந்து ஒரு முக்கிய மேட்டரை கொட்டியுள்ளார். அது அவர் ஒரு சாப்பாட்டு ராணி என்பதுதான்.
கவர்ச்சி காட்டுவதில் மட்டும் தாராளமாக இல்லாமல், சாப்பாட்டிலும் வஞ்சனை இல்லாமல் அள்ளிக் கொட்டிக் கொள்வாராம் நமீதா. சிறு வயதிலிருந்தே அப்படித்தானாம்.
பிடித்தது, பிடிக்காதது என்று பாரபட்சமே இல்லாமல் சாப்பிடுவாராம். இப்படி சாப்புடுறியே என்று யாராவது கேலி செய்தால் கூட அதைக் கண்டு கொள்ள மாட்டாராம். நம்ம வயிறு, நமக்குப் பசித்தால் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும் என்பது நமீதாவின் பாலிசியாம்.
நமீதாவின் வாய் சும்மாவே இருக்காதாம். எதையாவது கொறித்துக் கொண்டோ, சுவைத்துக் கொண்டோதான் இருக்குமாம்.
சிறு வயதில் சொந்த ஊரான சூரத்தில், நண்பர்களுடன் சாப்பாட்டுப் போட்டியிலும் குதிப்பாராம் நமீதா. பெரும்பாலும் நமீதாவுக்கே வெற்றி கிடைக்குமாம்.
காலை சாப்பாடு என்றால் குறைந்தது 10 சப்பாத்திகள் வேண்டுமாம். நம்ம ஊர் சப்பாத்திகள் எல்லாம் சும்மா பச்சாக்கள். குட்டி, குட்டியாக இருக்கும். வடக்கத்தி சப்பாத்திக்கள் சைஸ் பெரியது என்பது தெரியும்தானே!
அதே ரேஞ்சில்தான் மதியமும் மல்லுக்கட்டுவாராம். இரவுதான் செமத்தியான விருந்தாக இருக்குமாம்.
ஆனால் நடிகையாக வந்த பிறகு சாப்பாட்டில் கொஞ்சம் போல கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளாராம் நமீதா.
தமிழ் திரையுலகில் நமீதாவுக்கு இன்னொரு நல்ல பெயரும் உண்டு. அதாவது கொடுக்கிற சாப்பாட்டை சத்தம் போடாமல் சமர்த்தாக சாப்பிடுவாராம். இது வேண்டும், அது வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லையாம். சாதா சாப்பாடாக இருந்தாலும் சரி, பெரிய சாப்பாடாக இருந்தாலும் ஒரே மாதிரியான திருப்தியுடன் சாப்பிடுவாராம்.
பேஷ், பேஷ் ரொம்ப நன்ன பொண்ணுதான்!


Click it and Unblock the Notifications











