நயனதாரா பற்றி என்னிடம் கேட்காதீர்கள்!-தமன்னா

By Staff

Tamanna
பையா படத்தில் என்னை நடிக்கக் கூப்பிட்டார்கள். ஒப்புக் கொண்டு வந்துள்ளேன். இதற்கு முன் அந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தவர் யார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்கிறார் தமன்னா.

லிங்குசாமியின் பையா படத்தில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருந்தார். இதற்காக அவருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டது.

ஆனால் திடீரென்று சம்பளத்தை குறைக்கச் சொல்லி லிங்குசாமி தரப்பில் கேட்கப்பட்டதால் கடுப்பான நயனதாரா, படத்திலிருந்தே விலகிக் கொண்டதோடு, அந்தக் கால்ஷீட்டை ரூ.25 லட்சம் மட்டுமே பெற்றுக் கொண்டு ஒரு மலையாளப்படத்துக்குக் கொடுத்துவிட்டார்.

இதையடுத்து பையாவில் கார்த்தி ஜோடியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதுபற்றி தமன்னா கூறியதாவது:

என்க்கு முன் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தவர் யாரென்ற தகவல் எனக்குத் தேவையில்லை. அதையெல்லாம் க்ளியர் செய்துவிட்டுத்தான் என்னை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

எனவே அதைப் பற்றி பேசவேண்டாம். நயனதாரா பற்றி நான் என்ன சொல்லமுடியும். அவர் ஒரு நடிகை... படத்திலிருந்து ஏதோ காரணங்களுக்காக விலகுகிறார். ஒரு படத்திலிருந்து ஹீரோயின் விலகுகிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும்.

எனக்கு மற்றவர்களுடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. தமிழில் இப்போது நான்கு படங்கள் நடிக்கிறேன். மேற்கொண்டு எந்தப் படமும் ஒப்புக் கொள்ளவில்லை. நேரமின்மை மற்றும் இருக்கிற படங்களை சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலைதான் அதற்குக் காரணம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X