மீனா ரிசப்ஷன்-திரையுலகம் வாழ்த்து

By Staff

Meena with Vidya Sagar
நடிகை மீனாவின் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் வந்து வாழ்த்தினர்.

பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும், நடிகை மீனாவுக்கும் திருப்பதியில் கல்யாணம் நடந்தது. அதில் குடும்பத்தினர், உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திரையுலகத்திலிருந்து இயக்குநர் சேரன், மீனாவின் நெருங்கிய தோழி நடிகை சங்கவி, தயாரிப்பாளர் சிவா மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரையுலகினர் திரண்டு வந்திருந்தனர்.

முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வாழ்த்து தெரிவித்து மணமக்களை ஆசிர்வதித்தார்.

நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், ஸ்ரீகாந்த், சிபி, ஜெயம் ரவி, பிரபு, விஜயக்குமார், சின்னி ஜெயந்த், நடிகைகள் ராதிகா, சங்கவி, சுஹாசினி, தேவயானி, கே.ஆர்.விஜயா, ஸ்ரீதேவி, மகேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்னர்.

அதேபோல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமண வரவேற்புக்கு வரவில்லை. அவர் வராவிட்டாலும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீனா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X