twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆள் மாறாட்ட வழக்கு புளோராவுக்கு ஜாமீன் மறுப்பு

    By Staff
    |

    Flora with Shriman
    சென்னை: அமெரிக்காவுக்கு போலி ஆவணங்களைக் காட்டி விசா எடுக்க முயன்ற வழக்கில் சிக்கி கைதாகியுள்ள நடிகை புளோராவுக்கு ஜாமீன் வழங்க சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    குஸ்தி, கஜேந்திரா, ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள புளோராவும், ஸ்ரீலதா என்ற பெண்ணும் அமெரிக்க தூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

    ஸ்ரீலதாவை தனது மேக்கப் உதவியாளர் என்று கூறி விசா கேட்டிருந்தார் புளோரா. விசாரணையில் அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று தெரிய வந்தது. மேலும் தாக்கல் செய்த ஆவணங்களும் பொய்யானவை என்று தெரிய வந்தன. இதையடுத்து அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர் தூதரக அதிகாரிகள்.

    இதையடுத்து போலீஸார் இவர்கள் இருவரையும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் வெங்கட் ரெட்டி என்பவரையும் கைது செய்தனர்.

    கைதான புளோரா சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து புளோராவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    சந்தோஷமாக இருக்கிறார் புளோரா

    இதற்கிடையே சிறைக்குச் சென்ற புதிதில் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த புளோரா இப்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.

    தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள பெண்களுடன் கேஷுவலாக பேசுகிறாராம். கொடுக்கிற சாப்பாட்டை வாங்கி சாப்பிடுகிறாராம். ஆரம்பத்தில் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இப்போது சாப்பாடு பழகி விட்டதாம்.

    சப்பாத்தியைத்தான் அதிகம் கேட்டு வாங்கி சாப்பிடுகிறாராம். அத்தோடு சமையல் கட்டுக்குச் சென்று அங்குள்ள சமையல் பெண்களிடம் சகஜமாக பேசுகிறாராம். அவரும் சில நேரங்களில் சமையல் செய்கிறாராம்.

    புளோராவிடம் நடிப்புலக அனுபவங்கள் குறித்து சக கைதிகள் ஆவலோடு கேட்கிறார்களாம். ஆனால் புளோராவுக்கு தமிழ் தெரியாததால் தனக்குத் தெரிந்த அளவுக்கு அவர்களிடம் பேசுகிறாராம் புளோரா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X