ஹினிரோஸ் இப்போது செளந்தர்யா
முதல் கனவே பட நாயகி ஹனிரோஸ் தனது பெயரை செளந்தர்யா என மாற்றிக் கொண்டுள்ளார்.
கேரளாவிலிருந்து வந்த கவர்ச்சிப் பூதான் ஹனிரோஸ். பெயரிலேயே இனிமை இருந்தும், தமிழ் ரசிகர்களுக்கு இது சரிப்பட்டு வராது என்பதால் தனது பெயரை இப்போது செளந்தர்யா என செளந்தர்யமாக மாற்றி விட்டார்.
மேலும், ஏற்கனவே செளந்தர்யா என்ற பிரபல நடிகை இருந்ததால் அந்த பெயர் மக்களுக்கு எளிதில் பரிச்சயமான பெயர் என்பதால், அதே போல தன்னையும் மக்கள் எளிதில் மனதில் பதித்துக் கொள்வார்கள் என்பதும் இந்த பெயர் மாற்றத்திற்கு ஒரு காரணமாம்.
தற்போது காந்தர்வன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஹனி ரோஸ். இப்படத்தில் செளந்தர்யா என்ற பெயரில் நடிக்கிறாராம். இதுதவிர 2 புதுப்பட வாய்ப்புகளும் தேடி வருகிறதாம்.
பெயர் மாற்றத்தால் விரைவில் பெரிய இடத்திற்கு முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் ஹனிரோஸ் என்கிற செளந்தர்யா.


Click it and Unblock the Notifications











