ஒரு வழியாக 'கோடம்பாக்கம் வந்தார்' இலியானா!

வேட்டைக்காரனில் இலியானாவை ஜோடியாக்க முயன்று முடியாமல்தான், அனுஷ்காவை ஒப்பந்தம் செய்தாராம் விஜய்.
இந்நிலையில், விக்ரம் நடிக்கும் '24' படத்தில் நடிக்க சம்மதித்துள்ள இலியானா அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு ஒரு மாத கால்ஷீட்டை உடனே தந்துள்ளாராம். இதற்கு அம்மணி வாங்கிய சம்பளம் ஒரு கோடிக்கும் அதிகம் என்கிறார்கள்.
பல நடிகைகள் இந்த ரோலில் நடிக்க காத்திருந்தனர் என்றும், ஆனால் இயக்குநரும் நடிகரும் இலியானாதான் வேண்டும் என பிடிவாதமாக ஒப்பந்தம் செய்தனர் என்றும் கோடம்பாக்க்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாவரும் நலம் புகழ் விக்ரம் குமார் இயக்கும் இந்த புதிய படத்தை மோகன் நடராஜன் தயாரிக்கிறார்.
24 படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. இலியானா தொடர்புடைய காட்சிகள் இரண்டாவது ஷெட்யூலில் படமாக்கப்பட உள்ளன.
Comments


Click it and Unblock the Notifications