'ஜோ'வின் வாரிசு காஜல்!
ஜோதிகாவின் அடுத்த வாரிசு காஜல் அகர்வால்தான் என்று கோலிவுட்டில் ஏகோபித்த குரலில் கூறத் தொடங்கியுள்ளனர்.
முக பாவனைகளை விதம் விதமாக காட்டுவதில் ஜோதிகாவுக்கு நிகர் அவர்தான். டான்ஸிலும் கூட முடியாத ஸ்டெப்ஸ்களில் தனது சின்னச் சின்ன முக பாவனைகளால் அதை நேர்த்தியாக்கி விடுவார் ஜோதிகா.
அந்த இடத்தை இப்போது காஜல் அகர்வால் பிடித்து விட்டதாக கூறுகிறது மோதி விளையாடு பட யூனிட்.
சரண் இயக்கியுள்ள மோதி விளையாடு படத்தில் காஜல்தான் நாயகி. இயக்குநர் சரண் ஏதாவது ஒரு காட்சியைச் சொன்னால் சட்டென்று அதை தனது முகத்திற்குக் கொண்டு வந்து விடுகிறாராம் காஜல்.
பாடி லாங்குவேஜை விட காஜலின் முக பாவனைகள் படு பவர்ஃபுல் என்கிறது பட யூனிட். அதேபோல டான்ஸிலும் கூட சின்னச் சின்ன சேஷ்டைகளை சேர்த்து புது வடிவம் கொடுத்து விடுகிறாராம் காஜல்.
பாரதிராஜா கையால் குட்டுப்பட்டவராயிற்றே, சாமானியமானவராகவா இருப்பார்..!


Click it and Unblock the Notifications











