சொந்த வீடு பார்க்கும் கார்த்திகா

தூத்துக்குடி படம் மூலம் நாயகியானவர் கார்த்திகா. ஆனால் இதுவரை பிரேக் ஏதும் இல்லாமல், பத்தோடு பதினொன்றாக இருந்து வருகிறார்.
சில படங்களில் நடித்துள்ள அவர் கிளாமராகவும் நடிக்க முடிவு செய்து புது ஆல்பத்தையும் ரெடி செய்து களத்தைக் கலக்க தயாராகி வருகிறார்.
இந்த நிலையி்ல் அவருக்குப் புதுப் பிரச்சினை. இதுவரை அவர் வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருகிறார். ஆனால் பல வீடுகள் மாறி விட்டார்.
இதுவரை இருந்து வீடுகள் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு பிரச்சினை. இதனால் அடிக்கடி வீட்டை மாற்ற வேண்டிய நிலை.
யோசித்துப் பார்த்த கார்த்திகா இப்போது சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதற்காக சில புரோக்கர்களையும் அவர் அமர்த்தி தீவிரமாக வீடு தேடி வருகிறார்.
நல்ல வீடாக அமைந்தால் அதை வாங்கி விடும் முடிவில் இருக்கிறாராம் கார்த்திகா.
Comments


Click it and Unblock the Notifications