நமீதாவின் அதிரடி ஆசை!

கிளாமர் ரோல்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கும் நமீதாவுக்கு சேலை கட்டி பாந்தமாக நடிக்க ஆசை என்றாலும் கூட யாரும் அப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லையாம்.
இதனால் தொடர்ந்து கிளாமர் ரோல்களாகவே நமீதாவிடம் வந்து கொண்டிருக்கின்றன. இது அவருக்கு அலுத்துப் போய் விட்டதாம்.
இப்படியே எத்தனை நாட்களுக்குத்தான் நடித்துக் கொண்டிருப்பது என்று யோசித்துப் பார்த்த நமீதா, தன்னைத் தேடி வரும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் கிளாமர் தவிர்த்து நல்ல கேரக்டர்களாக இருந்தால் வாருங்கள் என்று கூறி அனுப்பத் தொடங்கியுள்ளாராம்.
இதுதவிர ஆக்ஷன் ரோலிலும் நடிக்க ஆசையாக உள்ளாராம். வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ரீமேக்கில் சினேகா நடிக்கப் போக, அவரே அதிரடி வேடத்தில் நடிக்கும்போது தாட்டியான உடல் வாகுடன் இருக்கும் நான் நடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்று எண்ணுகிறாராம்.
இதனால் தன்னைத் தேடி வருவோரிடம், ஆக்ஷன் ரோல் இருந்தால் சொல்லுங்கள் என்று கோரிக்கை வைக்கிறாராம்.
விரைவில் நமீதா 'நச்'சென்று தாக்கும் ... என்ற பன்ச் லைனுடன் ஏதாவது அதிரடிப் படத்தின் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











