நிக்கோல் 'பேக்கப்'!

எனவே வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்கிறேன் என்று சென்னை ஓட்டலை காலி செய்துவிட்டு தன் சொந்த ஊர் பூனாவுக்கே பேக்கப் சொல்லிவிட்டாராம்.
அடடா என்ன அழகு படத்தில் ஜெய் ஆகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் நிக்கோல். அந்தப் படத்தில் மகா கவர்ச்சியுடன் அவர் ஆடிப் பாடினாலும், படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த ஆறுமனமே படமும் எதிர்பார்த்தபடி போகவில்லை. தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் நாய்குட்டி. கிட்டத்தட்ட படம் முடிந்துவிட்டது.
வேறு புதுப்பட வாய்ப்புகள் தரவும் யாரும் முன்வராததால், தான் வளர்ந்த இடமான பூனாவுக்கே சென்று விட்டார் நிக்கோல்.
"வாய்ப்பு வரும்போது சென்னைக்கு வந்துவிடுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் வருவேன்", என்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications