யார் நீ?: திவ்யாஸ்ரீ-நிதீஷ்!

By Staff

Nithish with Divya Sri
அன்பே வா என்றொரு படம். மக்கள் திலகம் நடித்த ஏவிஎம்மின் மகத்தான வெற்றிப்படம் அல்ல... சில ஆண்டுகளுக்கு முன் புதுமுகம் தென்றல் குமார் நடித்து வெளிவந்த படம். முதல் படத்திலேயே சன் டிவியின் சிறந்த புதுமுகத்துக்கான விருதைப் பெற்றவர் தென்றல்.

முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆருக்கு நெருக்கமான அரசியல் தலைவருமான கே.ஏ.கிருஷ்ணசாமியின் சகோதரி மகன் இந்த தென்றல்.

அன்பே வா படத்துக்குப் பிறகு சற்று இடைவெளி விட்ட தென்றல், இப்போது தனது பெயரை நிதீஷ் என மாற்றிக் கொண்டுள்ளார். வெங்கட் ஈஸ்வர் எனும் புதியவர் இயக்கும் யார் நீ? படத்தில் இவர்தான் கதாநாயகன். திவ்யாஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். காதல் காட்சிகளில் அம்மணி கன்னணா பின்னாவென்று கவர்ச்சி காட்டி சூடேற்றியிருக்கிறாராம்.

படம் நடிப்பது தவிர, திரைத்துறைக்கு உபயோகமான இன்னொரு பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் நிதீஷ். அது போரூருக்கு அருகே சகல வசதிகளுடன் அவர் அமைத்துவரும் புதிய ஸ்டுடியோ. இதில் போஸ்ட் புரொடக்ஷன், பிரிவியூ தியேட்டர், மருத்துவமனை, டிவிடி தியேட்டர், ஏசி ப்ளோர்கள் என நவீன ஸ்டுடியோவுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

தனது இந்த முயற்சி குறித்து தென்றல் என்கிற நிதீஷ் இப்படிக் கூறுகிறார்:

அன்பே வா படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படம் பண்ணும் வாய்ப்புக் கிடைத்த்து. நினைத்திருந்தால் அடுத்த படத்துக்கு நானே கூட பூஜை போட்டிருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமில்லை. நல்ல கதைகளைத் தேடுவதில் கணிசமான நாட்களை செலவழித்தேன். இடையில் சில மாதங்கள் அமெரிக்கா போய் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களைக் கற்று வந்தேன்.

இப்போது யார் நீ படத்தில் நடிப்பதோடு, எங்கள் சொந்தப்பட நிறுவனம் ட்ராகன் மூவீஸ் படத்திலும் நானே கதாநாயகயான நடிக்கிறேன்.

இதைத் தவிர, அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை இயக்கிய ஆண்ட்ரூ இயக்கத்தில் யாருக்குத் தெரியும்? எனும் படத்திலும் நடிக்கிறேன்.

ஹாலிவுட் தரத்தில் சென்னையில் ஸ்டுடியோ கட்ட வேண்டும் என்பது எனது லட்சியம். அது இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது, என்றார் நிதீஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X