நடிகை காவேரி-வைத்தி சமரசம் இல்லை!

By Staff

Kaveri
நடிகை காவேரிக்கும், ஒளிப்பதிவாளர் வைத்திக்கும் இடையே நடந்து வந்த சமரசப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரத்தை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கே சமரச தீர்வு மையம் அனுப்பி வைத்துள்ளது.

நடிகை காவேரிக்கும், ஒளிப்பதிவாளர் வைத்திக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டு முகப்பேரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பம் நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வைத்திக்கும், அவரது மாமன் மகளுக்கும் கல்யாணம் முடிவானது. இதை அறிந்த காவேரி போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் வைத்தி தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், இருவரையும் சமரச தீர்வு மையத்தை அணுகுமாறு உத்தரவிட்டார். அதன்படி இருவரும் சமரச தீர்வு மையத்தின் ஆலோசனைக்கு உட்பட்டனர். பல சுற்றுப் பேச்சுவார்த்ைதக்குப் பிறகும் இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து இந்த விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கே அனுப்புவதாக சமரச மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து வைத்தியின் முன்ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் அல்லது அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு மீண்டும் ஆஜர்:

இதற்கிடையே, நடிகர் பிரசாந்த் தனது மனைவிக்கும், தனக்கும் நடந்த திருமணம் செல்லாது, அவரிடம் உள்ள குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரசாந்த் சார்பில் அவரது வக்கீல் ஆனந்தன் ஆஜரானார். பிரசாந்த்தும் வந்திருந்தார். அதேபோல, கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து கேட்டு அவரது முதல் கணவர் வேணு பிரசாத் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஆஜராவதற்காக பிரசாத், கிரகலட்சுமி ஆகியோர் ஆஜரானார்கள்.

இந்த வழக்குகள் தொடரப்பட்ட பின்னர் 3 பேரும் சேர்ந்து கோர்ட்டுக்கு வந்தது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X