நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

By Shankar

சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பேன். மீண்டும் நம்பர் ஒன் நடிகையாக (இவர் எப்போது அந்த இடத்திலிருந்தார்?) என்று சபதமெடுத்துள்ளார் நடிகை ப்ரியாமணி.

சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடிக்கத்தான் ஒவ்வொரு நடிகையும் ஆசைப்படுகிறார்கள். சிலர் அப்படிப்பட்ட விருப்பம் தனக்கு இல்லை என்று வெளிப்படையாக சொன்னாலும், உள்ளுக்குள் அதை ஒரு வெறியாகவே வைத்திருக்கிறார்கள்.

பருத்திவீரனுக்குப் பிறகு ப்ரியாமணி மிகவும் பரபரப்பான நடிகையாகப் பார்க்கப்பட்டார்.

ஆனால், உடலை மூடும் ஆடைகளே வேண்டாம். கவர்ச்சியா நடிக்கிறேன் என்று அவர் தினமும் பேட்டி கொடுத்து வந்ததில், நான்கைந்து படங்களிலேயே ரசிகர்களுக்கு அலுத்துப் போய்விட்டார்.

இப்போது ப்ரியாமணி என்றொரு நடிகை முன்பு தமிழில் நடித்து வந்தார், என்று சொல்லும் அளவுக்குதான் அவரது நிலைமை உள்ளது.

இதுகுறித்து ப்ரியாமணி கூறுகையில், "இப்போது நான் எனது தவறுகளைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் இந்த கேரக்டர்தான் வேண்டும் என்று கேட்பதுதான் முட்டாள்தனம். வருகிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும். தேசிய விருது பெற்றும் எனக்கு இன்னும் சினிமாவில் முதலிடம் கிடைக்காதது ஏமாற்றம்தான்.

ஆனாலும் அந்த இடத்தை நிச்சயம் பிடிப்பேன். அதற்கேற்ற படங்களில் நடிப்பேன்.

சிறந்த நடிகை என்பதை முன்பே நிரூபித்து விட்டேன். இனிமேல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் நீடிப்பதற்கு கவர்ச்சி அவசியம். அதையும் தொடர்வேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X