அபராதத்துடன் அட்வான்ஸைத் திருப்பி தர ஸ்ரேயாவுக்கு உத்தரவு!

ஆனால் திடீரென்று இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று ஸ்ரேயா தெரிவித்துவிட, விவகாரம் தயாரிப்பாளர் கவுன்சிலுக்குப் போய் விட்டது.
விவரத்தைக் கேட்டவர்கள், கதிரேசன் கொடுத்த அட்வான்ஸை உடனே திருப்பித் தரவேண்டும் என்று ஸ்ரேயாவுக்கு உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, படத்தில் நடிக்க காரணமில்லாமல் மறுத்தது, இதனால் தயாரிப்பாளர் அடைந்த மன உளைச்சல் போன்றவற்றுக்கு அபராதமாக ரூ 5 லட்சம் தரவேண்டும் என்றும் கூறிவிட்டனர்.
தமிழில் பெரிதாக படம் இல்லாத ஸ்ரேயாவுக்கு இது பெரிய அதிர்ச்சியாகி விட்டதாம். "ரஜினியுடன் இவர் நடித்த சிவாஜி மட்டும் வராமல் போயிருந்தால் இந்த உயரத்துக்கே வந்திருக்க மாட்டார் ஸ்ரேயா. ஆனால் கிடைத்த இடத்தைத் தவறவிட்டு, இப்போது தயாரிப்பாளர்களுக்கும் பிடிக்காத நடிகையாகிவிட்டாரே" என்றார் தயாரிப்பாளர் சங்க பிரமுகர் ஒருவர்.
Comments


Click it and Unblock the Notifications