விடியும்வரை காத்திரு ரம்பா!

கண்ணழகி மீனாவுக்கு இயக்குநர் வாசு குசேலன் மூலம் வாழ்வு கொடுத்ததைப் போல தொடையழகி ரம்பாவுக்கு ஒரு இயக்குநர் வாழ்வு கொடுத்திருக்கிறார். அவர் பெயர் வியாஸ்.
தான் முதன் முதலாய் இயக்கும் விடியும்வரை காத்திரு எனும் புதிய படத்துக்கு ரம்பாதான் கதாநாயகியாக வேண்டும் என தயாரிப்பாளரிடம் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தாராம்.
பிரகாஷ் ராஜ் நாயகனாக நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகிறது.
தற்போது கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக வந்துபோய்க் கொண்டிருக்கும் ரம்பா, விரைவிலேயே அந்த ஷோவுக்கு குட் பை சொல்லிவிட்டு முழு நேரமும் சினிமாவுக்கே செலவழிக்கப் போகிறாராம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் ரஜினி, கமல் என முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டுக் கலக்கிய ரம்பாவுக்கு, மீண்டும் அந்த பொற்காலம் திரும்பாது என்ற உண்மை தெரிந்தே இருக்கிறது. அதனால்தான் உஷாராக நல்ல கேரக்டர் இருந்தா கொடுங்க என முன்னணி இயக்குநர்களிடம் கூறி வருகிறாராம்.
இதுதான் புத்திசாலித்தனம்!


Click it and Unblock the Notifications











