பஞ்ச்லைன் பாரு... சமீராவின் புது கெட்அப்!
அசல் திரைப்படம் முதலுக்கே மோசம் வைத்துவிட்டதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் சமீரா ரெட்டி. கவுதம் மேனன் படம் தவிர வேறு படங்கள் இல்லாத நிலை.
இப்போது மீண்டும் அவருக்கு தனியாகக் கலக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பிரபுதேவா மூலம்.
விஷாலை வைத்து அவர் இயக்கும் அடுத்த படத்தில் சமீராதான் நாயகி. விஷாலின் உயரத்துக்கு பக்காவாகப் பொருந்துவார் என்பதால் இவர்தான் மெயின் ஜோடி. சைடில் குத்தாட்டம் போட வேறு நாயகிகளும் உண்டாம்.
இந்தப் படத்தில் சமீராவின் பெயரே பஞ்ச்லைன் பாரு. ரொம்ப துடுக்கான பாத்திரமாம். எங்கும் எதிலும் ஒரு பஞ்ச் வைப்பது படத்தில் இவர் ஸ்டைலாம்.
கடந்த வெள்ளியன்று படப்பிடிப்பு துவங்கியது. விஷால் இன்னும் பாலாவின் 'கஸ்டடியிலிருந்து' வரமுடியாததால், இப்போதைக்கு சமீரா - விவேக் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளை சுட்டுக் கொண்டிருக்கிறாராம்!!
நேற்று சமீராவின் பிறந்த நாள். அதை பிரபு தேவா உள்பட யூனிட்டே கொண்டாடியதில், சமீரா செம குஷியாகிவிட்டாராம்!


Click it and Unblock the Notifications











