'கோல்டு கோட்டட் பூ' சந்தியா!

பாகவதர் காலத்தில்தான் நடிகர்களும், நடிகைகளும் தாங்களே பாடுவார்கள். இப்போது அப்படியெல்லாம் இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் டப்பிங் கொடுத்து படத்தை முடித்து விடுகிறார்கள்.
இருப்பினும் அவ்வப்போது ஹீரோக்களும், ஹீரோயின்களும் சொந்தக் குரலில் பாடும் அரிதான நிகழ்வுகளும் இடம் பெறத்தான் செய்கின்றன.
முன்பு ஷாலினி, அமர்க்களம் படத்தில் சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடினார். அருமையாகவே இருந்தது ஷாலினியின் குரல்.
இப்போது அந்த வரிசையில் சேருகிறார் காதல் புகழ் சந்தியா. மஞ்சள் வெயில் படத்தில் இரு பாடல்களைப் பாடியுள்ளாராம் சந்தியா.
எப்படி நடந்தது இது.. இயக்குநர் வசீகரன் இதுகுறித்துக் கூறுகையில், சந்தியா ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாகவே இருக்க மாட்டார். ஏதாவது பாடலை முனுமுனுத்தபடி இருப்பார். சில நேரங்களில் சத்தமாகவும் பாடுவார்.
அவரது குரல் வசீகரமாக இருப்பதை உணர்ந்த நான் படத்தில் வரும் ஒரு பாடலை பாடக் கூறினேன். அவரும் முழுமையாக பாடிக் காட்டினார். இதையடுத்து அதை அப்படியே இசையமைப்பாளர் பரத்வாஜிடம் போட்டுக் காட்டினேன்.
அவருக்குக் குரல் பிடித்துப் போகவே, கோல்டு கோட்டட் பூ நீயா? ஐஸ் போட்ட தீ நீயா? என்ற பாடலையும், ஷைலாலோ ஷைலாலோ என்ற பாடலையும் பாடினார் சந்தியா...
இதுதான் நடந்தது என்று கூறி முடித்தார் வசீகரன்.


Click it and Unblock the Notifications











