மலையாளத்தில் சந்தியா பிசி

காதல் படத்திற்குப் பின்னர் அப்படியும், இப்படியுமாக நடித்து வரும் சந்தியாவுக்கு மலையாளத்திலும் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
தமிழில் தற்போது நூற்றுக்கு நூறு, ஓடிப் போலாமா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், மலையாளத்தில் புதிய படம் ஒன்று அவருக்கு வந்துள்ளது. ஏற்கனவே இருமுறை ஜோடி போட்ட பிருத்விராஜ்தான் இப்படத்திலும் சந்தியாவுக்கு நாயகன்.
மலையாளத்தில் ஒரு படத்திலும், தமிழில் கண்ணாமூச்சி ஏனடா படத்திலும் பிருத்விராஜுடன் இணைந்து நடித்துள்ளார் சந்தியா. இந்த நிலையில் மீண்டும் பிருத்வியுடன் ஜோடி போடுகிறார் சந்தியா.
எங்க ஜோடிக்கு நல்ல பெயர் உண்டு. எனவே இந்தப் படத்தின் மூலம் அது மேலும் வலுப்படும் என்கிறார் சந்தியா.
சந்தியாவுக்கும், பிருத்விராஜுக்கும் இடையே காதல் டிராக் ஒன்று ஓடிக் கொண்டிருப்பதாக முன்பு ஒரு கிசுகிசு இருந்தது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











