ஷாம்னா டூ பூர்ணா!

கேரளாவிலிருந்து வந்துள்ளவர்தான் பூர்ணா. ஆனால் அம்மணியின் ஒரிஜினல் பெயர் ஷாம்னா. இந்தப் பெயரில்தான் பகடை என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் படம் வளரவில்லை. பாதியிலேயே படுத்துக் கொண்டு விட்டது.
இந்த நிலையில்தான்அவரைத் தேடி வந்தது கொடைக்கானல். இப்படத்திலும் ஷாம்னா என்ற பெயரில்தான் நடித்துக் கொண்டிருந்தார் பூர்ணா. படத்தில் கிளாமருடன் கூடியநடிப்புப் பாத்திரம். சிறப்பாக நடித்துக் கொண்டிருந்தபோது தான் திருமுருகனின் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் கிடைத்தது பூர்ணாவுக்கு.
இப்படத்தில் ஷாம்னாவின் பெயரை பூர்ணா என மாற்றினார் திருமுருகன். பெயர் மாறிய ராசியோ, என்னவோ, பூர்ணாவின் திறமை அறிந்து பல பட வாய்ப்புகள் தேடி வந்தன. அதிலிருந்து 3 படங்களை தேர்வு செய்துள்ளார் பூர்ணா.
தனது பெயர் மாற்றம்தான் இந்த பட வாய்ப்புக்கு காரணம் என சென்டிமென்ட்டாக பூர்ணா நினைக்க, இப்போது தனது பெயரைநிரந்தரமாக பூர்ணா என வைத்துக் கொள்ள தீர்மானித்து விட்டாராம் பூர்ணா.
கொடைக்கானல் படத்திலும் தனது பெயரை பூர்ணா என்றே டைட்டில் கார்டில் போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம் பூர்ணா. அவர்களும் ஓ.கே.சொல்லி விட்டார்களாம்.
இதைத்தான், குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை என்பார்களோ?


Click it and Unblock the Notifications











