குளிர்பான விளம்பரங்கள்-ஸ்ரேயா 'நோ'!

By Staff

Shriya Saran
ஒரு படம் ஹிட்டானால் அடுத்து வரிசையாக புதிய படங்களில் நடிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடித்து கல்லா கட்ட ஆரம்பித்துவிடுவது திரையுலகில் இன்றைய வாடிக்கை. ஓரிரு நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும், பல லட்சம்... ஏன் கோடிகளில் கூட சம்பளம் கிடைத்துவிடும்.

முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம் உள்பட பலரும் இந்த வேலையைச் செய்கிறார்கள். ஆனால் வெகு அரிதாகத்தான் ஓரிருவர் சில கட்டுப்பாடுகளோடு விளம்பரப் படங்களை ஒப்புக் கொள்கிறார்கள்.

கோக கோலா குளிர்பானத்துக்கு விஜய்தான் விளம்பர தூதர். அஜீத் இப்போது விளம்பரப் படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை.

நமீதா புடவைக் கடை திறப்பு, நகைக்கடை விளம்பரம், மசாலா விளம்பரம், மசாஜ் எண்ணெய் விளம்பரம் என 'ஆபத்தில்லாத' ஐட்டங்களாகப் பார்த்து ஒப்புக் கொள்கிறார்.

த்ரிஷா, அசின் போன்றவர்களும் விளம்பரங்களில் தூள்கிளப்புகிறார்கள்.

ஆனால் குறிப்பிட்ட விளம்பரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற நல்ல பிடிவாதத்துடன் இருப்பவர்கள் ஒருசிலர்தான். உதாரணத்துக்கு நடிகை ஸ்ரேயா.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என்பது இவர் கொள்கை. உபயோகிப்பவர்களுக்கு எந்த ஆபத்துமில்லாத பொருள்களுக்கான விளம்பரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற கண்டிஷனோடு ஜவுளிக்கடை, பிரபல நிறுவனங்களின் அழகு சாதனப்பொருட்கள் விளம்பரங்களில் மட்டும் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம் ஸ்ரேயா.

எக்காரணம் கொண்டும் குளிர்பான விளம்பரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கறாராகக் கூறி விடுகிறாராம்.

"முன்பு ஒருமுறை குளிர்பான விளம்பரமொன்றில் நடித்தேன். அதனால் நிறைய குழந்தைகள் அந்தக் குளிர்பானத்தை தொடர்ந்து குடிப்பதாகவும், அதனால் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் வருத்தப்பட்டனர் குழந்தைகளின் பெற்றோர். அப்போதே, வேண்டாம் இந்த மாதிரி விளம்பரங்கள் என முடிவு செய்துவிட்டேன்", என்கிறார் ஸ்ரேயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X