சிம்ரன் சுத்தம்!

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இடுப்பழகியாக, கனவுக் கன்னியாக ரகளை செய்து கொண்டிருந்தவர் சிம்ரன்.
ஆனால் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாக டெல்லிக்குப் போன பின்னர் அவரை தங்களது மனதில் கெளரவமான இடத்திற்குத் தள்ளி விட்டனர் ரசிகர்களும், திரையுலகினரும்.
குழந்தை பெற்று திரும்பி வந்த சிம்ரன், மறுபடியும் நாயகியாக நடிக்க கடுமையாக முயற்சித்தார். ஆனால் கிடைத்தது என்னவோ 2வது நாயகி கேரக்டர்கள்தான். அப்படியும் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தார்.
இப்போது அம்மா, அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்கள்தான் வந்து கொண்டிருக்கிறதாம். இதனால் அப்செட் ஆகி விட்ட சிம்ரன், இப்படிப்பட்ட கேரக்டர்கள் வேண்டாம் என நிராகரிக்கிறாராம்.
இதனால் கையில் படம் ஏதும் இல்லை. இந்த நிலையில் புதிதாக படம் தயாரிக்க தீர்மானித்துள்ளாராம் சிம்ரன். அதில் அவரே நாயகியாக நடிக்கப் போகிறாராம்.
இப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளாராம் சிம்ரன்.


Click it and Unblock the Notifications











