நானா பொறுப்பு?- தமன்னா ஆவேசம்

மதன் படத்தில் நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தமன்னாதான் என்றும், அதற்காக அவருக்கு ரூ.50,000 அட்வான்ஸ் தரப்பட்டதாகவும், ஆனால் அவர் வேறு படங்களில் பிஸியாகிவிட்டதால் 1 வருடம் காத்திருந்ததாகவும் ஜெய் ஆகாஷ் கூறியிருந்தார்.
இதற்கு தமன்னா உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
மதன் படத்தில் நடிக்க நான் 2 வருடங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் படப்பிடிப்பை அவர்கள் துவங்காமல் இழுத்தடித்தார்கள். அதற்குள் நான் ஹேப்பி டேஸ் படத்தில் நான் நடித்தே முடித்துவிட்டேன்.
மீண்டும் ஜெய் ஆகாஷ் மதன் படத்தில் நடிக்க என்னை அணுகினார். அப்போது என்னிடம் நான்கு படங்கள் கைவசம் இருந்தன. எனவே மதன் படத்தில் நடிக்க முடியவில்லை. ஜெய் ஆகாஷ் அப்படத்துக்காக போட்டோ ஷூட் கூட நடத்தவில்லை. வேறு எங்கோ என் படத்தைப் பெற்று போஸ்டரில் அச்சிட்டு விளம்பரத்துக்கு பயன்படுத்தியுள்ளார், என்றார் அவர்.
என்மேல் இதுவரை எந்தப் புகாரும் தரப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தால், நானும் நடிகர் சங்கம் போக வேண்டியிருக்கும் என்றார் தமன்னா.


Click it and Unblock the Notifications











