இளைஞனில் வில்லியானார் நமீதா!

சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தில் பா விஜய் நாயகனாக நடிக்கிறார். தாய்க்காவியம் என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி எழுதிய நாவல்தான் இப்போது இளைஞனாக உருவாகிறது.
இந்தப் படத்தில் மிகவும் பலமான ஒரு வில்லி கேரக்டர் உள்ளதாம். இந்தப் பாத்திரத்துக்கு நிறைய பேரை யோசித்துப் பார்த்த இயக்குநரும் ஹீரோவும் கடைசியில் நமீதாவை ஓகே செய்துள்ளனர். அவரை அணுகு கதை சொன்னதும், மிகவும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம் நமீதா.
இதுகுறித்து நமீதா கூறுகையில், "இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கலைஞர் சார் படத்தில் நடிப்பது இன்னுமொரு பெருமை..." என்றார். அடுத்த வாரம் ஊட்டியி நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அவர்.
படத்தின் நாயகியாக நடிப்பவர் ரம்யா நம்பீசன். வித்யாசாகர் இசையமைக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications